திருக்குறள் · பயனில சொல்லாமை

குறள் 191

எளிய பொருள்

பலர் வெறுக்குமாறு பயனில்லாதவற்றைப் பேசுபவரை எல்லாரும் இகழ்வார்கள்.

உரையும் மூலமும்

உரைக் குறிப்புகள் · மதிப்பாய்வுக்கான வரைவு

பரிமேலழகர்

அறிவுடையோர் பலரும் வெறுக்குமாறு பயனற்றவற்றைப் பேசுவதன் விளைவு இகழ்ச்சி என்கிறார்.

பதிப்பில் குறள் 191

மணக்குடவர்

பலர் வெறுக்கும் பேச்சு எல்லாரிடமிருந்தும் இகழ்ச்சியை வரவழைக்கும் என்கிறார்.

பதிப்பில் குறள் 196
மணக்குடவர் பதிப்பில் உள்ள வரிகள்

பல்லார் முனியப் பயனில சொல்லுவா
னேல்லாரு மெள்ளப் படும்.

மின்னூல் ஆதாரம் · மதுரைத் திட்டம்